சிவானந்தா, விவேகானந்தா பாடசாலைகளுக்கு உயிரியல் பாட நூல்கள் வழங்கி வைப்பு

0
451

சிவானந்தா, விவேகானந்தா மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை சிவானந்தா தேசியப்பாடசாலை மற்றும், கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி ஆகியவற்றுக்கு உயர்தரக் கற்கையில் ஈடுபடும் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான உயிரியல் பாடத்துக்கான நூல்களை வழங்கி வைக்கப்பட்டது.

இந்தப் புத்தகங்கள் சிவானந்தா தேசியப்பாடசாலை அதிபர் தங்கையா யசோதரன் , கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் திருமதி கரிதாஸ் திலகவதி ஆகியோரிடம் சிவானந்தா, விவேகானந்தா மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியக்கலாநிதி பி.சிறிகரநாதனால் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது சிவானந்தா, விவேகானந்தா மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் என்.ரகுகரன், உறுப்பினர்களான எஸ்.யசோதரன், என்.கிரிதரன் உள்ளிட்டோரும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.