நாட்டில் அரசியல் செய்ய வருகின்றவர்களில் நூற்றுக்கு ஐம்பது சதவீதமானவர்கள் மக்களின் பணத்தை களவாடுகின்றார்கள்

0
582

மக்கள் பணத்தை கொள்ளையிட்டு அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பணத்தை திருடிய அரசியல் கலாசாரத்தினால் இன்று வேறு எந்தவொரு கட்சித் தலைவருக்கும் அரசியல் மேடைக்கு வந்து தாம் தூய்மையானவர்கள் என்றோ மக்கள் சார்பானவர்களென்றோ கூறமுடியாதுள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த நாட்டில் அரசியல் செய்ய வருகின்றவர்களில் நூற்றுக்கு ஐம்பது சதவீதமானவர்கள் மக்களின் பணத்தை களவாடுகின்றார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஊடாக நாடு முழுவதிலும் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் மக்கள் பணத்தை களவாடவோ சூரையாடவோ ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்.

மட்டக்களப்பு மாவடிவேம்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நாட்டில் நல்ல படித்தவர்கள், வைத்தியர்கள், பொறியலாளர்கள், பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள், விஞ்ஞானிகள், குறைவில்லாத வளங்கள் வசதிகள் வாய்ப்புகள் இருந்தும் ஏன் இந்த நாடு முன்னேறவில்லை என மக்கள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்கின்றார்கள்.

இலவச மருத்துவம், இலவச கல்வி, வீதிகள் குளங்கள் புனரமைப்பதற்காக தொழில் வாயப்புக்களை ஏற்படுத்துவதற்காக பணத்தை கையாடல் செய்துள்ளார்கள் இந்த கள்வர்களுக்கு நீங்கள் மன்னிப்பு வழங்க வேண்டாம் நானும் மன்னிப்பு வழங்கவே மாட்டேன்

இந்த நாட்டில் அரசியல் செய்ய வருகின்றவர்களில் நூற்றுக்கு ஐம்பது சதவீதமானவர்கள் மக்களின் பணத்தை களவாடுகின்றார்கள்என்றார்.

நன்றி சபேசன்