பொங்கல் விழாவானது தமிழருக்கு மாத்திரம் உரியதல்ல நான்கு மதத்தவரும் கொண்டாட வேண்டியதொரு பொது விழா

0
210

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் பொங்கல்விழா இம்முறை
திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலய
மைதானத்தில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக  நடைபெற்றது.

மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம் நிஷாம் தலைமையில் நடைபெற்ற  இப்
பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக கலாநிதி ஸ்தாபகர் உலக சைவ திருச்சபை
கனடா ப.அடியார்விபுலானந்தன் சிறப்பு அதிதியாக் செயற்றிட்ட தலைவர்
சமயங்கள் மற்றும் விழுமியங்கள் கல்வித்துறை தேசிய கல்வி நிறுவகம்
பொன்.ஜெயரூபன் ஆகியோரும் அழைப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த
அனைத்து வலயக்கல்வி பணிப்பாளர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்

இதன்போது பலதரப்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளான கும்மி கோலாட்டம் கரகம்
மற்றும் கிராமிய விளையாட்டுக்களான கிட்டிபொல்லுகட்டைபந்து கிளித்தட்டு
போன்றனவும் நான்கு மதங்களை பிரதிபலிக்கும்  நிகழ்வுகள் நடைபெற்றது.

தலைமை தாங்கிய கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் இப் பொங்கல் விழாவானது
தமிழருக்கு மாத்திரம் உரியதல்ல நான்கு மதத்தவரும் கொண்டாட வேண்டியதொரு
பொது விழாவாகும் என அவர் தெரிவித்தார்.