சுகாதாரத்துக்கு ​தொலைக்காட்சி சேவை

0
515

நாட்டு மக்களிடையே சுகாதாரத்தைப் பேணும் நோக்கில் தேசிய சுகாதாரத் தொலைக்காட்சிச் சேவையொன்று ​நாளை  முதல் கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டு மக்களின் சுகாதார நிலைமையைப் பேணல் மற்றும் சுகாதாரமானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பல் என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தொலைக்காட்சிச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

தொற்றா நோய்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல்இ குடும்பநலச் சுகாதாரம் தொடர்பில் அறிவூட்டல்இ போஷாக்குஇ விளையாட்டு மற்றும் வீட்டு வாழ்க்கை தொடர்பில் தெளிவூட்டல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்இ இந்தத் தொலைக்காட்சிச் சேவையூடாக ஒளிஇ ஒலிபரப்பப்படுமெனஇ சுகாதார அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் பிரசன்ன அதிகாரி தெரிவித்தார்.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் இந்தத் தொலைக்காட்சிச் சேவை ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன்இ அதன் பிரதம விருந்தினராகஇ சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன கலந்துகொள்ளவுள்ளார்.