தேர்தலின் முடிவு இலங்கையில் தமிழீழம் உருவாகப் போகின்றதா? அல்லது ஒற்றையாட்சி உருவாகப்போகின்றதா நான் சொல்லவில்லை மகிந்த சொல்கிறார்.

0
391

இரா. சம்பந்தன்.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் படி எமக்கு சுயாட்சி உரித்து உண்டு. அந்த உரிமை மதிக்கப்பட வேண்டும் நாம் தற்போது நிதானமாக நியாயமாக நேர்மையாக ஒரு மித்த நாட்டுக்குள் நியாயமான அந்தஸ்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றோம்.அது நடைபெறா விட்டால் எமது சம்மதம் இல்லாமல் நடைபெறும் ஆட்சியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலையில்  நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் அபயபுர வட்டார வேட்பாளர்களை ஆதரித்து இடம் பெற்ற பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் 16 மாலை இராஜவரோதயம் சதுக்கத்தில் இடம் பெற்ற போது இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளை தலைவரும் முன்னால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான சி.தண்டாயுதபாணி மற்றும் நகரசபை வேட்பாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தொடரந்து உரையாற்றும் போது

நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஒரு முறையும் மாற்றான் கட்சியில் இருந்து ஒரு தமிழ் பிரதிநிதி தெரிவு செய்யப்படவில்லை.யாழப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்டு உள்ளார்கள்  மட்டக்களப்பிலே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் வன்னியிலே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் ஆனால் திருகோணமலையிலே மாற்றான் கட்சியிலே இருந்து ஒரு தமிழ் பிரதிநிதி தெரிவு செய்யப்படவில்லை.இது எதைக் காட்டுகிறது என்றால் எமது மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் தமது வாக்குப்பலத்தை நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.மக்கள் கொள்கையில் இருந்து விலக வில்லை இது சரித்திர ரீதியாக கண்ட உண்மை.

சர்வதேச ரீதியில் இந்த தேர்தலை பலர் உற்று நோக்கிக் கொண்டு உள்ளார்கள் வடகிழக்கில் உள்ள மக்கள் விசேடமாக ஒரு மித்து நிற்கின்றார்களா என்று?தமிழ் மக்கள் மிக நீண்ட காலமாக போராடி வருகின்றார்கள் தமது உரிமையை சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் முடிவெடுத்து வாக்களித்து தமது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த தேர்தலின் முடிவு இலங்கையில் தமிழீழம் உருவாகப் போகின்றதா? அல்லது ஒற்றையாட்சி உருவாகப்போகின்றதா என்று கூறியுள்ளார் முன்னைநாள் ஜனாதிபதி மகிந்தராசபக்ச அவர்கள் இது போல அரசாங்கத்தின் முன்னைநாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார் இந்த தேர்தலுக்கு பின் முன்னைநாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமந்திரியாக பொறுப்பேற்க நேரிடும் என்று இதிலிருந்து புரிகிறதா இந்த தேர்தலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை

எங்களுடைய மக்களின் கைகளில் இருக்கும் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதம் எங்களுடைய வாக்கு மக்களுடைய வாக்கு என்பது எமது இறைமையுடைய முதலாவது அம்சம் அதனடிப்படையில் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் யார் இந்த நாட்டில் ஆட்சி அமைப்பது தங்கள் சார்பில் யார் ஆட்சியில் இருப்பது முதலான விடங்களை மக்கள் தீர்மானிக்கிறார்கள் எனவே வாக்கு என்பது ஒரு பெறுமதி மிக்க பிரயோசனமான ஒரு ஆயுதம்

ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை பிரகடத்தின் படி ஒரு மக்களை அவர்களின் சம்மதம் இல்லாமல் ஆட்சி புரிய முடியாது.ஆனால் கடந்த 70 வருடங்களாக எமது சம்மதம் இல்லாமல் எங்களை இந்த நாட்டில் ஆட்சி புரிபவர்கள் எம்மை ஆண்டு வந்துள்ளார்கள்.இது ஒரு தொடர்கதையாகவே உள்ளது .1947 முதல் இன்று வரை இந்த நாட்டை ஆண்டவர்களுக்கு நமது சம்மத்தை நாம் கொடுக்கவில்லை சம்மத்ததை கொடுக்காமலேயே நம்மை ஆண்டு கொண்டுள்ளார்கள்.இதை முன்னைநாள் ஐக்கிநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கிமூன் இலங்கைக்கு வந்திருந்த போது நான் தெளிவாக சொல்லி இருந்தேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் படி எமக்கு சுயாட்சி உரித்து உண்டு அந்த உரிமை மதிக்கப்பட வேண்டும் நாம் தற்போது நிதானமாக நியாயமாக நேர்மையாக ஒரு மித்த நாட்டுக்குள்  நியாயமான அந்தஸ்தை பொற்றுக் கொள்ள முயற்சிக்கின்றோம்.அது நடைபெறா விட்டால் எமது சம்மதம் இல்லாமல் நடைபெறும் ஆட்சியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

நாங்கள் இன்று அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மக்களுடைய பல கருமங்களை தீவிரமாக கையால வில்லை என்றும் எம்மீது குற்றம் சாட்ட சிலர் முயற்சிக்கிறார்கள்.அது தவறு நாங்கள் அரசாங்கத்தின் பங்காளிகள் அல்ல நாங்கள் அரசாங்கத்தின் அமைச்சர்களும் அல்ல அமைச்சர்களாக வரமாட்டோம் எமது பிரச்சினை தீரும் வரை அமைச்சர்களாக வரமாட்டோம்.எமது மக்கள் தமது உள்ளக சுயநிர்யண உரிமையின் அடிப்படையில் அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் அவர்களுடைய கருமங்களை அவர்களே கையாளக் கூடிய நிலை ஏற்படும் வரை நாம் அமைச்சுப் பதவிகளை ஏற்க மாட்டோம்.

இந்த நாட்டில் ஒரு கொடுரமான ஆட்சி நடைபெற்றது.அதை எமது மக்களின் வாக்குப் பலத்தால் நாம் மாற்றினோம் அதன் நிமிர்த்தம் எமது மக்களின் காணிப்பிரச்சினை காணாமல் போனோர் பிரச்சினை தொடர்பான விடயங்களுக்கு தீர்வு பெற்று வருகின்றோம்.

அமையப் போகின்ற உள்ளுராட்சி சபைகளில் மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பல அபிவிருத்தித் திட்டங்களை நாம் முன்னெடுக்க கூடிய நிபுணத்துவம் கொண்டவர்களை உள்வாங்கியுள்ளோம்.எனவே அபிவிருத்திப் பணிகள் சிறப்பாக இடம் பெறும்.என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.