மாணவர்களை பாடசாலையுடன் இணைப்பதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது – யமுனாகரன்

0
552

(படுவான் பாலகன்) பிள்ளைகளை பாடசாலையில் இணைத்துவிட்டால் எமது கடமை முடிந்துவிட்டது. அதிபர், ஆசிரியர்கள் பிள்ளைகளின் கல்வியை கவனித்து கொள்வார்கள் என்ற சிந்தனையில் பெற்றோர்கள் செயற்பட்டால் மாணவர்கள் சிறப்பு தேர்ச்சியினை அடைவது கடினமாகிவிடும் என பன்சேனை பாரி வித்தியாலய அதிபர் யமுனாகரன் தெரிவித்தார்.

தரம் 1ற்கு புதிதாக பன்சேனை பாரி வித்தியாலயத்தில்  இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு திங்கட்கிழமை நடைபெற்ற போதே இதனைக் குறிப்பிட்டார்.

பாடசாலையில் மாணவர்களை  இணைப்பதோடு, மாணவர்களின் வரவு குறித்தும், வீட்டு கற்றல் தொடர்பிலும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இதன் மூலமே இந்தப்பிரதேசத்தில் கல்விச்சமூகத்தினை உருவாக்க முடியும் என்றார்.