சட்டவிரோதமாக வடிசாராயம் விற்றவர் கைது கொக்கட்டிச்சோலையில் சம்பவம்.

0
294

சட்டவிரோதமாக வடிசாராயம் விற்றதாக ஒருவர் கொக்கட்டிச்சோலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்கட்டிச்சோலை கிராம உத்தியோகத்தருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படும் வடி சாராயத்தை விற்று வந்ததாக கூறப்படும் நபர் ஒருவரின் வீட்டினை சுற்றி வளைந்து தேடுதல் நடாத்திய போது குறித்த நபரின் காணியிலும் அவரது வீட்டிற்கு முன்னுள்ள வயலிலும் இருந்து சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட வடி சாராயம் 2 லீட்டர் பிளாஸ்ரிக் போத்தல்கள் இரண்டில் (02) இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு குறித்த பொருட்களும் அதனை விற்றதாக கூறப்பட்ட சந்தேக நபரும் கொக்கட்டிச்சோலை பொலிசாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.