கொக்கட்டிச்சோலையில் முதன் முறையாக லீக்முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

0
372

லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி முதன்முறையாக கொக்கட்டிச்சோலை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்திவரும் “படுவான் சமர்” உதைபந்தாட்ட போட்டிக்கு மேலதிகமாக வரலாற்றில் முதன் முறையாக இவ்வாண்டு லீக் முறையிலான உதைபந்தாட்ட போட்டியினை இவ்வாண்டு ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு பட்டிப்பளை வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுகளில் உள்ள கழகங்கள் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளின் போது 1ம் இடத்தை ஒரு போட்டியிலாவது பெற்ற கழகங்களை இணைத்து லீக் போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஆலோசனை வழிகாட்டலின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள லீக் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதலாவது போட்டியானது அரசடித்தீவு விக்கினேஸ்வரா கழகத்திற்கும் முதலைக்குடா விநாயகர் கழகத்திற்கும் அண்மையில் நடைபெற்று சமநிலையில் முடிவடைந்துள்ளது அடுத்த போட்டியானது    எதிர்வரும் 18ம் திகதி கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கும் சில்லிக்கொடியாறு பராசக்தி விளையாட்டுக்கழகத்திற்கும் குமரகுரு விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டிக்கு படுவான் லீக் என பெயரிடப்பட்டுள்ளதாக கழகத் தலைவர் திரு சி.தசியந்தன் தெரிவித்தார்.