இலங்கை தமிழன் விமானி ஆனான்

0
422

கல்வி இராஜாங்க அமைச்சரின் மகன் செல்வன் திவாகரன் இராதாகிருஸணன் வியட்நாம் நாட்டில்  விமானியாக தனது கடமையை பொறுப்பேற்றார். இவர் தனது ஆரம்ப கல்வியை நுவரெலியா புனித திருத்துவ கல்லூரியிலும் தொடர்ந்து கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும் மேற் படிப்பை இந்தியா மகாத்மா காந்தி பல்கலைகழகத்தில் படித்து வியாபார நிர்வாக முதுமானி பட்டத்தை பெற்றார். இவர் கல்வி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளராகவும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடதக்கது. இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தி இலங்கையை சேர்ந்த ஒரு தமிழன் இவ்வாறு விமானியானது தமிழர்கள் அனைவருக்கும் பெருமையானதாகும்.