மக்களின் எதிர்பார்ப்பை தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் நிறைவேற்ற கடந்த காலங்களில் முன்வரவில்லை

0
443

“எமது மக்களின் எதிர்பார்ப்பை தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் நிறைவேற்ற கடந்த காலங்களில் முன்வரவில்லை. இத்தேர்தலில் அதற்கான கதிரைகள் உரியவர்களுக்கு வழங்கப்படுவதற்கான பல அழுத்தங்களை பேச்சுவார்த்தைகளை நாம்மேற்கொண்டோம் ஆனால் அதற்கான உரிய பிரதிபலிப்பு கிடைக்கவில்லை.

இதனால் தான்அரசியல் சாராது பொது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த எமது தமிழர் சிவில் சமூககூட்டமைப்பின் சார்பில் இந்த தேர்தலில் இறங்க வேண்டியேற்றப்பட்டது.

என திருகோணமலையில் தேர்தலில் குதித்துள்ள “தமிழர் சிவில் சமூகக்கூட்மைப்பின்”; இணைப்பாளர் வர்குலநாதன் தர்மபவன் தெரிவித்தார்.

இக்கூட்டமைப்பின் பிரதான தேர்தல் பரப்புரை அலுவலகம்திருகோணமலை திருஞான சம்பந்தர் வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இங்கு மேலும் பேசிய அவர் குறிப்பிடுகையில்,

எமது குளுவின் சார்பில் தேர்தலில் திருகோணமலை நகரசபையிலும்,மூதூர் பிரதேச சபையிலும்வெற்றி கேடயம்சின்னத்தில் உறுப்பினர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நீண்டகாலமாக இங்குள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் நாம் எடுத்து வந்த பல்வேறு முயற்சிகள் தோல்வி கண்டன.

மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த விடயங்களை இக்கட்சிகள் செய்ய வில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளன.

எங்களுடைய மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கான தீர்வுகள் காணப்படும் அதே நேரத்தில் எமது தேசியப்பிரச்சனைக்கான தீர்வுக்கான முயற்சிகளும் எடுக்கப்படவேண்டும் என்பது எமது மக்களின் எதிர் பார்ப்பாகவுள்ளன.

தேசியப்பிரச்சனையை மட்டும்தான் தீர்ப்பதற்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்தால் மக்களின் அடிப்படையப்பிரச்சனைகளை எப்போது தீர்ப்பது?கடந்த காலங்களில் இந்த உள்ளுராட்சி மன்றங்களை இவர்கள் சரியாக ப்பயன்படுத்தி மக்களின் எதிர்பார்ப்பை எதிர்கொள்ளவில்லை என்ற பலமான குற்றச்சாட்டும் உள்ளன.

எதிர்காலத்தில் மேற்படி இரண்டு விடயத்தையும் கையாளக்கூடியதான கொள்கைளை முன்னெடுக்ககூடியவர்களை இக்கட்சிகள் தேர்தல்களில் நிறுத்தவேண்டும் என்பதனை அண்மைக்காலமாக பல்வேறு கட்சிகளிடமும் வலியுறுத்திவந்தோம்.

பல முக்கியஸ்தர்களை நேரடியாக சந்தித்தும் தெளிவு படுத்தியும் வந்தோம். ஆனால் பெரும் பாலும் ஒரு வெளிப்படைத்தன்மையற்ற பொருத்த மற்ற வேட்பாளர்களையே நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தான் நாமும் இவ்வாறான முடிவை ஒரு “மாற்றத்தை நோக்கி” எடுக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது.

ஏன் இந்த தேர்தலில் தமிழர் சிவில் சமூகம் சார்பான சுயேட்சைக்குழு தேர்தலில் நிற்கிறது என்ற கேள்வி பலரது மத்தியில் பரவலாக உள்ளன.

கடந்தகாலங்களில் உள்ளுராட்சிமன்றங்களில் நீண்டகாலமாக தமிழ் மக்கள் தாம் எதிர்நோக்கிவரும் அடிப்படைப்பிரச்சனைகளின் நிலமையைக்கருத்தில்கொண்டும்,தமிழ்தேசிய அரசியலில் ஏற்பட்டு வரும் சிதைவுகள் காரணமாகவும் தான் இந்த முடிவை நாம் எடுக்க நேரிட்டது.

இந்த தேர்தலில் நேரடியாக நிற்பதென்ற முடிவையும் எடுக்க வேண்டி ஏற்பட்டது.

நீண்டகாலமாக சமூகம்சார்ந்த பல பணிகளை செய்து வந்த நாங்கள், எமது தமிழ் தேசி ய நடவடிக்கைளில் பிரச்சனைகளை தீர்பதில் பின்னணியில் செயற்பட்டு வந்த நாங்கள் இன்றைய தேர்தலில் நேரடியாக இறங்க வேண்டி ஏற்பட்டுள்ளன.

பல தடவைகள் எமது தமிழ்தேசிய அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடும் கட்சிகளுடன் நாம் மேற்கொண்டு வந்த பேச்சுவாரத்தைகள் தோல்விகண்டன. மக்களின் எதிர்பார்ப்புகள் அவர்களால் கண்டு கொள்ள முடியாதவையாக விருந்தன. எனவே தமிழ் தேசிய அரசியலில் ஏற்பட்டு வரும் சிதைவுகளையும் சீர் செய்ய வேண்டிய தேவை இன்றைய நிலையில் ஏற்பட்டுள்ளன. எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழர் சிவில் சமூகக்கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார அலுவலகம் திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் குறித்த கூட்டமைப்பின் முதன்மை நகரசபைவேட்பாளரான ஓய்வு நிலை பிரதேச செயலாளர் எஸ். செல்வநாயகம் அவர்களால் வைபவரிதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கூட்டமைப்பின் இணைப்பாளர் வி.தர்மபவன்,வேட்பாளர்கள்மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர் ;