உரிமை என கூறிக்கொண்டு தேர்தலில் களமிறங்கியிருப்பவர்களின் பின் புலங்களை நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்

0
252
தற்போது தமிழ் மக்களின் உரிமையென கூறி தேசியவாதி போன்று தேர்தலில் களமிறங்கியிருப்பவர்களின் பின் புலங்களை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். என களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் வ.கண்ணன் அவர்கள் தெரிவித்தார்.

ஒந்தாச்சிமட்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
தற்போது உரிமை என கூறிக்கொண்டு தேர்தலில் களமிறங்கியிருப்பவர்களின் பின் புலங்களை நீங்கள் சரியாக புரிந்து கொண்டுள்ளீர்கள். அவர்களின் சுற்றுவட்டங்களையும் நாங்கள் ஒவ்வொருவரும் அறிந்த வைத்திருக்கின்றோம். களுவாஞ்சிகுடி வட்டாரத்தினை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றும் என்பதில் எங்களுக்கு எந்த ஐயப்பாடும்கிடையாது. கடந்த காலங்களில் பலதரப்பட்ட தேர்தலில் முகங்கொடுத்த இந்த பட்டிருப்பு தொகுதிக்கு தகுந்த பலாபலன்கள் வந்து சேரவில்லை என்பதனை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்
உண்மையில் நாங்கள் கடந்த  தேர்தலை  சரியான விதத்தில் பயன்படுத்தியிருந்தால் முழுமையான அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரை  இந்த பட்டிருப்பு தொகுதிக்கு பெற்றிருக்க முடியும். அதனை அந்த சந்தர்ப்பத்ததை நாங்கள் நழுவ விட்டுவிட்டோம்.
தற்பொழுது எமது பிரதேச அரசியல் சம்பந்தமாக பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருவதனை நாங்கள் அறிந்திருக்கின்றோம். நாங்கள் கடந்தகாலங்களில் உரிமைக்கும், உணர்வுக்குமாக செயற்பட்டடிருந்தோம். அந்த அடிப்படையில் அவை அனைத்தும் எமது உணர்வுகளை தூண்டியதே தவிர எங்களுக்கு மாறாக பெற்றுக்கொடுத்தது ஒன்றுமில்லை, என்பதனை நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.
இந்த தேர்தலில் தமிழ்த்தேசிய உணவாளர்கள் என்று கூறுகின்றவர்கள் யார் தலைமைதாங்கி களம் இறங்கியிருக்கின்றார்கள் எனபதனை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 1987ஆம்,1990ஆம் ஆண்டு காலப்பகுதியிலே எமது களுவாஞ்சிகுடி பிரதேசத்தை இரத்தக்கறை படியசெய்த சொல்லொண்ணா துயரத்தைதந்து எமது இளைஞர்களை  சுட்டு சுட்டு புதைத்தவர்கள் தற்பொழுது தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லுகின்றார்கள். எனவே அன்பார்ந்த மக்களே  இந்த தேர்தலில் சிந்தித்து செயற்படுங்கள் சரியானவர்களை தேர்ந்தெடுங்கள் உங்களின் தேரிவின் மூலம் எமது பிரதேசம் அபிவிருத்தி காணவேண்டும்; என அவர் இதன்போது தெரிவித்தார்…