மட்டக்களப்பு வானில் வெள்ளை நிற உருவங்கள் – மக்கள் பரபரப்புடன் பார்வை.

0
789

(படுவான் பாலகன்)  மட்டக்களப்பு மாவட்டத்தில், வெள்ளை நிறமான இரண்டு உருவங்கள், இன்று(12) இரவு வெள்ளிக்கிழமை வானில் பறந்த சம்பவம் மக்களிடத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு 07மணிக்கு பிற்பாடு, வெள்ளை நிறத்திலான இரண்டு உருவங்கள் பறவைகள் போன்று ஒன்றை ஒன்று முட்டியும், விலகியும் வானில் பறந்து கொண்டிருந்தன.

வானில் என்றும் இல்லாதவாறு இன்று இச்சம்பவம் இடம்பெற்றதினால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், பலரும் இதனை அவதானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.