தாந்தாமலைப் பகுதியில் யானையொன்றின் சடலம் மீட்பு

0
404

(படுவான் பாலகன் ) மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராமத்தின் ஒறுக்காகுழி ஊற்றுப் பகுதியில், இறந்த நிலையில் யானையொன்றின் சடலம் இன்று(12) வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
ஒறுக்காகுழி ஊற்று, காட்டுப்பகுதியிலேயே இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகைதந்து பார்வையிட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட யானை ஆண்யானையென்பதுடன் 15வயது மதிக்கதக்கதுயெனவும் இதன்போது குறிப்பிட்டனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.