பெரும்போகநெல் விளைச்சலை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தும் சபை தயார்

0
550

இம்முறை பெரும்போகத்தின்போது கிடைக்கப் பெறும் நெல் விளைச்சலை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தும் சபை தயாராகி வருகின்றது.

தற்சமயம் பயிர்ச்செய்கை நிலங்களிலிருந்து நெல் விளைச்சல் பெறப்பட்டு வருகிறது. அவற்றை கட்டுப்பாட்டு விலையில் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை நெல் சந்தைப்படுத்தும் சபை மேற்கொண்டுள்ளது.
உத்தரவாத விலைக்கும் குறைவான விலையில் நெல் விளைச்சல் விற்பனை செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்று சபையின் தலைவர் எம்.டீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே, தமது நெல் விளைச்சல்களை நெற்சந்தைப்படுத்தும் சபையிடம் விற்பனை செய்யும்படி விவசாயிகளை நெல் சந்தைப்படுத்தும் சபை கேட்டுள்ளது.