சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

0
512

(படுவான் பாலகன்)  கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா காளிகோவில் பகுதியில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டார் என்றசந்தேகத்தின்பெயரில் நபரொருவர் இன்று(11) வியாழக்கிழமை கொக்கட்டிச்;சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் நபரொருபர் ஈடுபடுவதாக, கிராமசேவையாளருக்கு கிடைத்த தகவலையடுத்து, கிராமசேவையாளர் குறித்த இடத்திற்கு சென்ற போது, மண்ணினுள் புதைக்கப்பட்ட நிலையில், இறப்பர் போத்தல் ஒன்றினுள் கசிப்பு காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் இளைஞர்களும் ஒன்றுகூடியுள்ளனர்.

 
குறித்த விடயம் தொடர்பில், பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கியதனைத் தொடர்ந்து, சிறிதுநேரத்தின் பின்னர் பொலிஸார், சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

 
இப்பிரதேசத்தில், சட்டவிரோத கசிப்பு உற்பத்திகள் இடம்பெற்றுவருதாகவும், இதனைதடுக்குமாறும் கூறி, அண்மையில் அப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.