பாடசாலை மாணவர்களுக்கு இலவச கொப்பிகள் வழங்கி வைப்பு

0
343

மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக் கழகத்தின் சமூக பணி பிரிவினரினால் ஏற்பாடு செய்திருந்த பாடசாலை மாணவர்களுக்கான இலவச கொப்பிகள் வழங்கும் நிகழ்வின்  முதல் நாள் நிகழ்வு 08 திகதி உத்தியோகபூர்வமாக சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர் ரீ.ஜசோதரனிடம் உரிய பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கப் பெறும் வகையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது கழகத்தின் சமூகப்பணி பிரிவினர்களின் ஏற்பாட்டில் கழகத்தின் தலைவர் ஈ.இராஜரெட்ணம் தலைமையில் நடைபெற்றதுடன் இதன் போது செயலாளர் பீ. நிவாசன், மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான ரீ.திசாந், எம். அபிநயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்தவகையில் வறிய மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் சிவானந்தா விளையாட்டுக் கழகத்தினால் முதல்முறையாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதன் பிரகாரம் அடுத்த கட்டமாக நாவற்குடா தர்மரெத்தினம் வித்தியாலயம்,      சாரதா வித்தியாலயம், பாரதி வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான கொப்பிகள் எதிர்வரும்  செவ்வாய் கிழமை (16/01/2018) திகதி வழங்கி வைக்கப்படவுள்ளதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது