சாய்ந்தமருதின் ஒரே எதிரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே!

0
384
எமக்கு சபையைத் பெற்றுத்தரும் எந்தக்கட்சியுடனும் இணைந்து கல்முனையில் மாநகரசபை ஆட்சி அமைப்போம்!
சாய்ந்தமருது சுயேச்சைஅணி வேட்பாளர் அசீம் கபே தலைவரிடம் தெரிவிப்பு!
(காரைதீவு  நிருபர் சகா)

 
கல்முனை மாநகரசபையில் 9கட்சிகளும் 4 சுயேட்சைகளும் போட்டியிடுகின்றன. அவற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைத் தவிர ஏனைய கட்சிகள் சாய்ந்தமருதின் நியாயமான தார்மீக கோரிக்கைக்கு ஆதரவளித்துள்ளன. எனவே சாய்ந்தமருதின் ஒரே எதிரி மு.கா.மட்டுமே. நாம் வெல்வது 100வீதம் உறுதியாகிவிட்டது.
 
இவ்வாறு  கல்முனை மாநகரசபைக்கு சாய்ந்தமருது சார்பில் போட்டியிடும் சுயேச்சை அணி வேட்பாளர் யு.எல்.எம்.அசீம் கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னக்கோனிடம் தெரிவித்தார்.
எமது சாய்ந்தமருது நகரசபைக் கோரிக்கையை; பெற்றுத்தரும் எந்தக்கட்சியுடனும் கைகோர்த்து இணைந்து கல்முனை மாநகரசபை ஆட்சியை அமைக்கத் தயாராகவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
 
சாய்ந்தமருது பேர்ள் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடலின்போது ‘ சாய்ந்தமருதில் ஏனைய கட்சிகளுக்கு தேர்தலில் நிற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரச்சாரத்திற்கு தடை விதித்துள்ளதாகவும் அறிகின்றேன். அது ஜனநாயக உரிமை மீறல் அல்லவா? இது உண்மையா?’ என்று தலைவர் கீர்த்தி தென்னக்கோன் வினவியதற்கு பதிலளிக்கையில் வேட்பாளர் அசீம் மேற்கண்டவாறு கூறினார்.
 
வேட்பாளர் அசீம் மேலும் கூறுகையில்:
தங்களிடம் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பச்சைப்பொய்யானவை. சாய்ந்தமருதில் எந்தக்கட்சிக்கும் நாம் தடைவிதிக்கவில்லை. பிரச்சாரத்திற்கும் தடையில்லை.
 
ஆனால் சாய்ந்தமருது மக்களின் ஏகோபித்த கருத்துக்கு மதிப்பளித்து உண்மையான கட்சிகள் ஒதுங்கிக்கொண்டன. ஆனால் மு.கா. மட்டுமே இவ்விதம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியாமல் போட்டியிடுகின்றது. அதுவே எமது எதிரி அவர்கள் தான். என்றார்.
 
மற்றுமொரு சுயேச்சை வேட்பாளர் றபீக் கருத்துரைக்கையில்:
 
எமது சாய்ந்தமருது நகரசபையைப் பெறும் தார்மீகப்போராட்டத்திற்காக நாம் பாரிய தியாகங்களைச்செய்துவருகின்றோம். சிறைக்குக்கூட சென்று வந்திருக்கின்றோம். அதனைப்பெறுவது எமது உரிமை.
அதற்காகவே மக்கள் சக்தியாக பள்ளிவாசல் உலமாக்கள் மற்றும் பொதுநிறுவனங்கள் ஏற்பாட்டில் இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
ஆனால் துரதிஸ்டவசமாக எம்மிடம் உறுதியளித்த கட்சிகள் ஏமாற்றத்தையே தந்தன. 40தடவைகள் எமது அமைச்சர்களையும் ஏனைய உயர்பிரமுகர்களையும் சந்தித்தோம். ஏன் பிரதம மந்திரிஜனாதிபதிக்குக்கூட அறிவித்தோம்.  ஆனால் விளைவு பூச்சியமாகவிருந்தன.
எனவேதான் ஊர்மக்களின் விருப்புக்கிணங்க நாம் சுயேச்சையில் இறங்கினோம். ஒரு கட்சியைத்தவிர ஏனைய கட்சிகள் எமது நியாயமான உரிமையை மதித்து ஒதுங்கின. எனினும் மாம்பழச்சின்னத்தில் போட்டியிடும் நாம் வெற்றிபெற்று மாநகரசபை ஆட்சியில் முக்கிய பங்காளராவோம். என்றார்.