நாட்டில் பெரும்போகச் செய்கை அறுவடை நடைபெறும் காலத்தில் அரசாங்கம் அரசி இறக்குமதி விவசாயிகள் பாதிப்பு

0
300

நாட்டில் பெரும்போகச் செய்கை அறுவடை நடைபெறும் காலத்தில் உள்ளுர் உற்பத்தியார்களை பாதிக்கும் வகையில் அரசாங்கம் அரசியை இறக்குமதி செய்துள்ளது அதனால் நுகர்வோர் நன்மையடைந்தாலும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குளாகியுள்ளனர் என விவசாய அமைப்புத் தலைவர் வ.கந்தசாமி தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகளின் ஏற்பாட்டில் செங்கலடி மத்திய கல்லூரி மண்டபத்தில் இன்று (07.01.2018) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பெரும்போகச் செய்கை வேளாண்மையை அறுவடை செய்ய உள்ள நிலையில் நெல் சந்தைப்படுத்தும் சபை நெல்லினை கொள்வனவு செய்ய முன்வராத காரணத்தினால் 1800 – 2000 ரூபாவரை வியாபாரிகள் கொள்வனவுக்காக கேட்கின்றனர்.

விவசாயத்தைப் பொறுத்தவரை ஏக்கர் ஒன்றிற்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவிடப்படுகிறது. பெரும்கேபாக விவசாய விளைச்சலானது 20 முதல் 25 மூடை விளைச்சலே கிடைகிறது சில பகுதிகளில் அதைவிட அதிகம் விளையலாம். இந்த நெல்லினை தறபோது வியாபாரிகள் கேட்கும் விலைக்கு விற்றால் எங்களுடைய உற்பத்திச் செலவைக்கூட பெற முடியாத நிலை ஏற்படும்.

மட்டக்களப்பு விவசாயிகள் கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து கடனுடன் இறக்கும் நிலையில் உள்ளார்கள். இதனை தவிர்ப்பதற்கு அரச அதிகாரிகள் அரசியல்வாதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக உன்னிச்சை மற்றும் உறுகாமம் நீர்ப்பாசன திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவர்கள் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமாரிடம் முன்வைக்கப்பட்டன.

அதன் காரணமாக அரசாங்க அதிபர் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியின் பயனாக இப்பிரதேசத்தில் விளைவிக்கப்படும் நெல்லை நெற்சந்தைப்படுத்தும் சபையினூடாக விற்பனை செய்வதற்கு ஏற்ற வகையில் ஜனவரி 22ஆம் திகதி மாவட்டத்தில் உள்ள 8 அரச நெல் கொள்வனவு நிலையங்களிலும் நெல்லை கொள்வனவு செய்வதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்வதாக கூறியுள்ளார்.

நெல்லினை அரசாங்கம் உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்தால் வெளியாரின் தலையீடு இருக்காது. நெல் சந்தைப்படுத்தும் சபை அம்பாளை மாவட்டத்தில் துரித மாக செயற்படுகிறது ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல்லினைக் கொள்வனவு செய்வதை ஊக்குவிற்க்க எவரும் இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை மூன்றில் இரண்டு சதவீதமான விவசாயிகள் ஒவ்வொவ்வொரு தடவையும் பாதிக்கப்படுகிறார்கள். வரட்சியால் பாதிக்கப்பட்;ட விவசாயிகளுக்கு வரட்சி நிவாரத்தை வழங்க உடனடியாக ஜனாதிபதி நடவடிக்கையெடுக்க வேண்டும். அறுவடை செய்யமுடியாமல் நஷ்டமடைந்த விவசாயிகளின் கடனை கழித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையெடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் அரசாங்கம் உர மானியமாக எமக்கு பணம் தெரவில்லை பசளையாக ஒரு பை உரம் 350 ரூபாவிற்குத் த்ந்தார்கள் அது விவசாயிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்தது. தற்போதைய அரசாங்கம் ஏக்கர் ஒன்றிற்று ஐந்தாயிரம் வீதம் ஐந்து ஏக்கருக்கு பணம் தருகிறார்கள் உரத்தின் விலை 2500 ரூபா என நிர்ணயிக்கப்பட்ட போதிலும் வெளிச் சந்தையில் 3000- 3200 ரூபா செலவிட்டு ஒரு பை உரம் வாங்க வேண்டியுள்ளது. உர மானியம் பணமாகத் தரத் தேவையில்லை கடந்த அரசாங்கங்கள் தந்திருப்பதைப் போல் பசளையாக தந்தால் அதிலே வேண்டிய பசளை கிடைக்கும் என்றார்.