தமிழர்களை மூலதனமாக கொண்டு செயற்படும் எல்லாக் கட்சிகளையும் எங்களுடன் வந்து சேருங்கள் செயற்படுங்கள் என கேட்கின்றோம்

0
429
தமிழர்களை மூலதனமாக கொண்டு செயற்படும் எல்லாக் கட்சிகளையும்  எங்களுடன் வந்து சேருங்கள் செயற்படுங்கள் என கேட்கின்றோம்
தமிழ் தேசியகூட்டமைப்புடன் சேர்ந்து செல்ல முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு தலைமைதாங்க முடியும்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை கண்ணியமாக நிதானமாக அர்த்தபுஷ்டியுடன் எடுத்துச் செல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து உழைக்க முடியாமல் சிறிய சிறிய அர்ப்ப காரணங்களுக்காக விலகிச் சென்றுள்ளவர்கள் வாக்கு கேட்டு வந்தால் பல கஷ்டங்களுக்கு மத்தியில் கூட்டை உருவாக்கிக் கொண்டு இன்னும் பாதுகாத்துக் கொண்டு இருக்கும் தமிழ் தேசியகூட்டமைப்புடன் சேர்ந்து செல்ல முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு தலைமைதாங்க முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் கேள்ளிவியெழுப்பியுளளார்.
 பெரும்தேசிய கட்சிகள் எமக்கு தொடர்ச்சியாக செய்துவந்த அநியாயங்கள் அட்டூழியங்களை அடிப்படையக கொண்டு அவர்களை விலக்கிவைக்கின்ற சந்தர்ப்பத்தில் தமிழர்களுக்குள் இருந்து சிறப்பாக செயற்பட முடியாமல் இருக்கின்ற ஏனைய தமிழ் கட்சிகளையும்  நிராகரிக்க வேண்டியவர்களாக நாங்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு ஊரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகத்தை சனிக்கிழமை மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடரந்து உரையாற்றுகையில்  – இந்த நாட்டில் தமிழ் மக்களின் மிகப் பெரிய அடையாளமாக இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேர்களாக இருக்கின்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கு மிகச் சிறந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.
 தமிழ் தேசிய கூட்டமைப்பு அபிவிருத்தி செய்யவில்லை என சிலர் மேல்போக்காக கூறித் திரிகிறார்கள் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான அபிவிருத்தி செய்துள்ளது என மக்களுக்குத் தெரியும். கோழிக் குஞ்சுகளையும், தையல் இயந்திரத்தை கொடுத்துவிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கிறார்கள்.
இந்த நாட்டிலே தமிழ் மக்கள் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டுள்ளார்கள் என வெற்றிக்குரலெழுப்பி தென்னகம் மகிழ்சி கொண்டாடியபோது இந்த நாட்டிலுள்ள தமிழர்கள் உரிமையோடு வாழத்தான் விரும்புகின்றார்கள் இவர்களுக்கான தலைமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்குகின்றது.
 ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய ஆணையை அவர்கள் தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். எந்த தேர்தல் நடைபெற்றாலும் வடக்கு கிழக்கு மாகாணத்திலே மக்களுடைய ஆணை தமிழ் தேசிய கூட்டமைப்புக்குத்தான் கிடைக்கிறது.
 இதனடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கின்ற அரசியல் திட்டத்தினை இந்த நாடு அங்கீகரித்தேயாக வேண்டும் என்கின்ற செய்தி சொல்லப்படுகின்ற சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் உறுதியான பிரதிநிதித்துவத்தை முன்னடத்திச் செல்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையினை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று சர்வதேச சமூம் கூறுவதற்கு உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒரு களமாக உள்ளது.
தமிழர்களை மூலதனமாக கொண்டு செயற்படும் எல்லாக் கட்சிகளையும்  எங்களுடன் வந்து சேருங்கள் செயற்படுங்கள் என கேட்கின்றோம். என்றார்.