விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பதின்மூன்று பேர் சுவிற்சர்லாந்தின் குற்றவியல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர்.

0
989

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பதின்மூன்று பேர் சுவிற்சர்லாந்தின் குற்றவியல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பதின்மூன்று பேர் எதிர்வரும் திங்களன்று சுவிற்சர்லாந்தின் குற்றவியல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சுவிற்சர்லாந்து, ஜேர்மன் மற்றும் இலங்கை நாட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களுள் உலகத் தமிழ் ஒருங்கமைச்சு சங்கத்தின் நிறுவனர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரும் அடங்குவர்.

1999 முதல் 2009ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில், தவறான வழிகளில் நிதிசேர்ப்பு நடவடிக்கைகள் மூலம் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து சுமார் 15.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவர்கள் சேர்த்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பதின்மூவர் மீதும் மோசடி, போலி ஆவணப்படுத்தல், பணச் சலவை மற்றும் பணம் பறித்தல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொய்யான ஆவணங்கள் மற்றும் பயமுறுத்தல்கள் மூலம் பணம் திரட்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் தண்டனை வழங்கப்பட முடியும்.

இவ்வாறு பெறப்பட்ட நிதி சிங்கப்பூர், டுபாய் வழியாக எல்.டி.டி.ஈ. இயக்கத்துக்குச் சென்று சேர்ந்ததாகவும் அவற்றை ஆயுதங்கள் வாங்க விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகவும் கருதப்படுகிறது.