நீச்சல் வீரர் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தனின் பெயரில் வல்வட்டித்துறையில் நீச்சல் தடாகம்

0
266
பாக்கு நீரிணையை நீந்தி உலக சாதனைககள் பலவற்றை நிலைநாட்டிய நீச்சல் வீரர் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தனின் பெயரில் வல்வட்டித்துறையில் நீச்சல் தடாகம் அமைக்கப்படவிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 இந்த வருடம் விளையாட்டுத்துறையில் புதிய மாற்றத்தை கொண்டுவர எண்ணியுள்ளேன் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கூறினார்.
 ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்தி கின்னஸ் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் அந்த அந்த பகுதி கால நிலைக்கு ஏற்ப நீச்சல் தடாகம் போன்ற விளையாட்டுத்துறைக்கான வசதிகளுக்கான திட்டம் முன்னெடுக்கப்படும்  ஏன்றும் அமைச்சர் கூறினார்.
கல்முனை,பண்டாரவளை ஆகிய பகுதிகளிள் உள்ளக விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படவுள்ளன என்று தெரிவித்த அமைச்சர்
கிராம சேவகர் பிரிவு ரீதியான விளையாட்டு போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறும் வீர,வீராங்கனை பிரதேச செயலக மட்ட போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதில் பங்குகொள்ளும் ஆட்டல்மிக்க வீரர்களுக்கு  இவ்வருட தேசிய விளையாட்டு விழாவில் வாய்யபளிக்கப்படும் 2018ம் ஆண்டு தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் ஒக்டோபர் 11,12,13 மற்றும் 14ம் திகதி இரத்தினபுரியில் இடம்பெறும் . கடந்த 2017 ம் ஆண்டு வெளியிட்டது போன்று இம்முறையும் 2018ம் ஆண்டுக்கான விளையாட்டு நாட்காட்டி மிகவிரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில்  விளையாட்டுத்துறை அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று குறிப்பிடுகையிலேயே அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்த விடயங்னளை குறிப்பிட்டார்.
மாத்தளை ஹொக்கி மைதானம் புனரமைக்கப்படவுள்ளதுடன் நுவரெலியாவில் அதி உன்னத விளையாட்டு மைதானம் இவ்வருடம் அமைக்கப்படும்.  5 ஆயிரம் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் இவ்வருடம் வழங்கப்படவுள்ளன என்றும் அமைச்சர்; தெரிவித்தார்;.
Thanks
news.lk