பதினேழு வருட முஸ்லிம் சமூக தலைமைத்துவ இடைவெளியை நிரப்பியவர் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் – காத்தான்குடி நகர சபை முதன்மை வேட்பாளர் ரீ.எல்.ஜவ்பர்கான்

0
264

பழுலுல்லாஹ் பர்ஹான்)

மாபெரும் தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவத்தில் பாரிய இடைவெளி நிலவியது. அந்த இடைவெளியை நிரப்பியவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீனே என  காத்தான்குடி நகர சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் மீரா பள்ளி -ஏழாம் வட்டாரத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கான் குறிப்பிட்டார்.

காத்தான்குடி நகர சபை தேர்தலில் நூறாணியா வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எம்.சப்ரியை ஆதரித்து நூறாணியா பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியாக தலை நிமிர்ந்து வாழவே தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தார். ஆனால் நமது தலைமைகள் மீண்டும் நம்மை பேரினவாத சாக்கடைகளுக்குள்ளேயே இழுத்துச் செல்கின்றன. இன்றைய சூழலில் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களைப் பேசுகின்ற அதற்காகப் போராடுகின்ற சிறந்த தலைமைத்துவ பண்புகள் அமைச்சர் றிசாட் பதியுத்தீனிடம் மட்டுமே காணப்படுகின்றன.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மயில் சின்னம் பாரிய சாதனை படைக்கும். அம்பாறை மாவட்டத்தில்; பல சபைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும்.

காத்தான்குடி நகரபையை தீர்மானிக்கும் சக்தியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகழும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.