சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கெதிராக கிளந்தெழுந்த முதலைக்குடா மக்கள்

0
848

(படுவான் பாலகன்) தமது கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் நடைபெற்றுவருகின்ற கசிப்பு உற்பத்திக்கெதிராக கிளந்தெழுந்த முதலைக்குடா கிராம மக்கள், இன்று(04) வியாழக்கிழமை ஆர்பாட்டபேரணியொன்றை முன்னெடுத்தனர்.

முதலைக்குடா கிராமசேவையாளர் அலுவலகத்திற்கு அண்மையில் ஆரம்பமான ஆர்பாட்ட பேரணி, அனைத்து கிராம வீதியினுர்டாகவும் சென்றது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் கிராமத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களென பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவோர், அவ்வாறான உற்பத்திகளை உடனடியாக நிறுத்த வேண்டும்மென்றும், அவ்வாறு நிறுத்தாமல் உற்பத்தி செய்யப்பட்டால், உற்பத்தி செய்பவர்களுக்கெதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும், அரசினால் வழங்கப்படும் எந்தவித சலுகைகளையும் வழங்ககூடாது. எனவும் கூறி கோசமிட்டனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமான கசிப்பு உற்பத்திகள் அதிகம் இடம்பெற்றுவருவதாகவும், இதன்மூலமாக குடும்பங்களிடையே முரண்பாடுகளும், பிள்ளைகளின் கல்வியில் பாதிப்பும் ஏற்பட்டுவருவதாக பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும் தின அபிவிருத்திக் கூட்டங்களிலும் கூறப்பட்டு வருகின்றது. ஆனாலும் இதுவரை சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிறுத்தப்படாமையினால் மக்கள் வீதிக்கு இறங்கி சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கெதிராக ஆர்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.