ஜோசப்பரராஜசிங்கத்தை படுகொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். கருணா

0
683

மட்டக்களப்புத்தொகுதியில் ஜோசப்பரராஜசிங்கம் ஐயாவுக்கு பிற்பாடு ஒரு நிலையான தலைமைத்துவம் இன்னும் உருவாகவில்லை.இதனை உருவாக்கவேண்டும்.அவர் ஒரு மாமனிதன் ,சிறந்த அரசியல்வாதி, சதிமுயற்சியால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். புத்திஐPவிகளை படுகொலை செய்வது முட்டாள்களின் வேலையாகும் என அண்மையில் மட்டக்களப்பில் தேர்தல்; களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக கருத்துத்தெரிவிக்கும் போது முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இவ்வாறு தெரிவித்துள்ளார்.