மட்டு.புனித மைக்கல் கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த ஒன்று கூடலும் கௌரவிப்பும்

0
397
மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்  வருடாந்த ஒன்று கூடலும் வருட இறுதி நிகழ்வும் மட்டக்களப்பு நகரிலுள்ள லங்கா சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.

 இலங்கையின் பழமை வாய்ந்த பாடசாலையான  மட்டக்களப்பு  புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த ஒன்றுகூடலும்  வருட இறுதி நிகழ்வும் மைக்கல் கல்லூரி பழைய  மாணவ சங்கத்தின்  தலைவர் அருட்பணி ஆர்.நவரெட்ணம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மைக்கல்  கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் சமூக ப்பிரிவு செயலாளர் வி.பிரதீபனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர  அதிதியாக கலந்துகொண்டார்.
மற்றும்  அதிதிகளாக  கல்லூரி  அதிபர் பயஸ் ஆனந்தராஜா  உட்பட  அருட்தந்தையர்களான ஜே.சில்வஸ்ரர், மரியதாஸ், டொமினிக் சுவாமிநாதன், யோசப் மேரி உள்ளிட்டோரும் கல்லூரியின் சிரேஸ்ட பழைய மாணவர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது வருட இறுதி நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் அருட்தந்தையார்களினால்  வருட இறுதி கேக்கினை  வெட்டி கல்லூரி சிறார்களுக்கு கொடுக்கப்பட்டதுடன் , பரிசில்களும் வழங்கப்பட்டது
நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி பழைய மாணவர்களின் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்களான ரி.ஏ.மாசிலாமணி, ஏ.ஏ.ஜீ.ராஜரெட்னம், ஈ.சி.கப்றியல் ஆனந்தராஜா, ஏ.நொபல் ஜோர்ச்பிள்ளை ஆகியோர் பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், தேசிய ரீதியிலும் , சர்வதேச  ரீதியிலும் நடத்தப்பட்ட  கபடி மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்த கல்லூரிக்கு பெருமை சேர்த்த பழைய மாணவர்களான திமோத்தி நிதுர்சன், அன்ரனி வினோஜித், விமலநாதன் கிறிஸ்ரி விஜய், சச்சிதானந்தம் உகந்தன், கணேசமூர்த்தி சினோதரன் ஆகியோர் கௌரவித்து விருதுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.