சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அநாகரீக கருத்துக்களை இடுவோருக்கு சிக்கல்

0
383

சமூகவலைத்தளங்களில் தனிநபருக்கு எதிராகவோ அல்லது நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அறியதருமாறு காவல்துறை தலைமையகம் கேட்டுகொண்டுள்ளது.

முகபுத்தகம் உள்ளிட்ட அனைத்து சமூகவலைத்தளங்களிலும் ஒருவருக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கு அநாகரீகமான இடுகைகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

ஆபாச நடிகர் நடிகைகளின் உடலையும், பழிவாங்க நினைப்பவரின் தலைப்பகுதியையும் இணைத்து பதிவேற்றம் செய்யும் கலாசாரம் இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக காவற்துறை தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் 0112 320 141/ 0112 320 142/ 0112 320 143/ 0112 320 144/ 0112 320 145 அல்லது 0112 326 979 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு சைபர் பிரிவிற்கு அறிவிக்க முடியும், என்பதோடு இடுகைகளை அகற்றி கொள்வதற்காக srilanka cert நிறுவனத்திற்கு 0112 691 692 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என்பதோடு report@cert.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு அறிவிக்குமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளங்களில் ஆபாச புகைப்படங்கள் காணொளிகளை பதிவேற்றம் செய்தல், தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்தல், மத ரீதியான கருத்துக்களை தவறான வழியில் பயன்படுத்துதல், விபசாரத்திற்கான விளம்பரங்களை மேற்கொள்ளுதல், போதைப்பொருள் விற்பனைக்கான தொடர்புகளை அறிவித்தல், தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான எழுத்துரு அல்லது காணொளி பதிவேற்றங்கள் மேற்கொள்ளல் உள்ளிட்ட முதன்மை குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறான சட்டவிரோத ஈடுபடுவர்கள் தொடர்பிலும் அவர்களின் குடும்ப பின்னணி தொடர்பிலும் ஊடகங்களில் பகிரங்கமாக பொது விளம்பரம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.