உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அனைத்து ஆதரவும் கண்டிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழங்கும்

0
221

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் அனைத்து ஆதரவும் கண்டிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழங்குவோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் இணைப்பாளர் கணேசன் பிரபாகரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அதிகார சபைகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் திங்கட்கிழமை (01) மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – ஜனநாயகப் போராளிகள் கட்சி தனித்துவமாக இயங்கி வந்தாலும் எங்களுடைய தேசியத்தின் தேவை கருத்தி எங்களுடைய தலைமை தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

வடக்கு கிழக்கில் பெரும்பாலான பகுதிகளில் எங்களுடைய போராளிகள் எங்களுடன் இணைந்துள்ளார்கள் அந்த போராளிகளும் அவர்களுடைய உறவுகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக வாக்குகளை வழங்குவார்கள்.

எங்களுடைய போராளிகளின் நலன் விடயங்களில் அதிக அக்கறை செலுத்தி வருவதால் எங்களுடைய தலைமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி முன்னாள் போராளிகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு தனித்துவம் உள்ளது. அந்த அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக களமிறங்கியுள்ள வேட்பாளர்களுக்கு எங்களுடைய கட்சிஅ ங்கத்தவர்கள் சார்பாக பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்” என்றார்.