திருவாசகம் முற்றுமோதல்

0
274

இந்து மக்களினால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களில் ஒன்றான திருவெம்பாவை சிறப்பித்து, மாணிக்கவாசக சுவாமிகளால் அருளிச்செய்யப்பட்ட திருவாசகம், முற்றுமோதல் நிகழ்வு ஆலயங்கள் தோறும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட ஆலயங்கள் பலவற்றில் இன்று(31)திருவாசகம் முற்றுமோதல் நடைபெற்றது.

முதலைக்குடா பாலையடிப்பள்ளையார் ஆலயம், முனைக்காடு சித்திவிநாயகர், கொட்டாம்புலைப்பிள்ளையார், நாகலிங்கேஷ்வரர் ஆலயங்களில் திருவாசகம் முற்றுமோதல் நடைபெற்றது.