மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் மகிழடித்தீவு பாடசாலை சாதனை

0
1655

(படுவான் பாலகன்) வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பெறுபேற்றின் அடிப்படையில், மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது.

மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி பயின்று இவ்வருடம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய கலைப்பீட மாணவர்களில் 95வீதமான மாணவர்கள் மூன்று பிரதான பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதியினைப் பெற்றுள்ளதுடன், எஸ்.லிபிகரன் 18வது மாவட்ட நிலையையும், கே.கோவர்த்தனன் 38வது மாவட்ட நிலையையும், கே.கர்த்திரா 42வது மாவட்ட நிலையையும், கே.ஜிதுசன் 202வது மாவட்ட நிலையையும், எஸ்.தர்சன் 233வது மாவட்ட நிலையையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று இவ்வருடம் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய கணித துறை மாணவர்களில் அ.சுதர்சன் என்ற மாணவன், 43வது மாவட்ட நிலையை பெற்றுள்ளான். அதேபோல பொறியியல் தொழிநுட்ப துறையில் தோற்றிய, வில்வரெத்தினம் கதிஸ் என்ற மாணவன் 13வது மாவட்ட நிலையை பெற்றுள்ளார்.

அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய கலைப்பீட மாணவர்களுள் ம.கோகிலா என்ற மாணவி 125வது மாவட்ட நிலையை பெற்றுள்ளார்.

கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் கல்வி பயின்று, உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய கலைப்பீட மாணவர்களுள் 77வீதமான மாணவர்கள் பிரதான பாடங்கள் மூன்றிலும் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிபெற்றுள்ளதுடன், பா.மஞ்சுலாதேவி என்ற மாணவி 192வது மாவட்ட நிலையை பெற்றுள்ளார். இவ்வடிப்படையில் மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது.