உயர்தரத்தில் சாதனை படைத்த படுவான்கரை மாணவன்

0
1129

(படுவான் பாலகன்) இலங்கைப் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபெற்றின் அடிப்படையில், உயிர் தொழிநுட்பம் பாடப்பிரிவில், மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தில் உள்ள பழுகாமம் கிராமத்தினைச் சேர்ந்த கணேசமூர்த்தி துதிசன் என்ற மாணவன் மாவட்டத்தில் முதல் நிலையையும், நாடுபூராகவும் 33வது இடத்தினையும் பெற்றுள்ளார்.
களுதாவளை மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற குறித்த மாணவன், எதிர்காலத்தில் சூழலியல் தொடர்பில் கற்று சூழலினை வளப்படுத்துவதே தனது நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.
அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பத்தினை வழிநடத்தும் தந்தையின் உழைப்பிலும், தாயின் அரவணைப்பிலும், ஆசிரியர்கள், உறவுகளது வழிகாட்டலிலும் கல்வி கற்ற இம்மாணவன் குடும்பத்தில் நான்கு பிள்ளைகளில் நான்காவது பிள்ளையென்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் தன்பின்னால் உருவாகின்ற மாணவர்கள் தொழிநுட்பம் பாடத்தினை கற்க வேண்டும் என்பதுடன், முயற்சியின் மூலம் எதனையும் சாதிக்கமுடியும். கடின முயற்சி செய்ததன் மூலமே தான் மாவட்டத்தில் முதல்நிலையைப் பெற்றதாகவும் குறித்த மாணவன் தெரிவித்தார்.