கிழக்கு மாகாணத்தில் தரம் ஒன்றிக்கு சேருகின்ற தமிழ் மாணவர்களின் தொகை வருடம் ஒன்றிக்கு நான்காயிரத்தால் குறைவடைகின்றது.

0
1909

தமிழ் பிள்ளைகளின் பிறப்பு வீதமானது குறைந்து செல்வதனைக் குறித்து நிற்கின்றது

சுமார் பதினைந்து வருடங்களுக்கு அப்பால் எமது நிலமை என்னவாகும் என்பதனை நீங்கள் சிந்தித்து பாரக்கவேண்டும்.

இளம் பெற்றோர்கள் இதனை கருத்தில் எடுக்கவேண்டும் .

  இவ்வாறானதோர் நிலையானது தொடர்ந்தால் கடைசியாக ஒரு இனம் அழியும் தறுவாய்க்கே இட்டுச்செல்லும் என்பதில் ஐயமில்லை

கிழக்கு மாகாணத்தில் தரம் ஒன்றிக்கு சேருகின்ற தமிழ் மாணவர்களின் தொகை வருடம் ஒன்றிக்கு நான்காயிரத்தால் குறைவடைந்து செல்கின்றது. இந் நிலை தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் தமிழினத்தின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்.

களுதாளை புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை வித்தியாலயத்தன் பரிசளிப்பு விழா வித்தியாலய அதிபர் சோ.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.

பாடசாலையின் தேவைகள் அனைத்தையும் வலயத்தில் இருந்து பெற முடியும் என அனைத்தையும் அரசாங்கத்தை நம்பியிருக்கமுடியாது சமூகத்தின் பங்களிப்பு மிகமுக்கியமாகின்றது அந்த வகையில் இந்தபாடசாலையில் பெற்றோர்களின் பங்களிப்பு மிக இன்றியமையாததாக காணப்படுகின்றமை பெருமைக்குரியது.

 

அது மாத்திரமின்றி பெற்றோர்களுக்கு மிக முக்கியமான விடயம் ஒன்றைமுன்வைக்க விருப்புகின்றேன் கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் தரம் ஒன்றிக்கு சேருகின்ற தமிழ் மாணவர்களின் தொகை வருடத்திற்கு வருடம் நான்காயிரத்தால் குறைவடைந்து கொண்டு வருகின்றது.

அதாவது திருகோணமலை மாவட்டம், அம்பாரை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம், ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாகவே இந்த நிலை காணப்படுகின்றது. இது எதனை காட்டுகின்றது என்றால் எமது தமிழ் பிள்ளைகளின் பிறப்பு வீதமானது குறைந்து செல்வதனைக் குறித்து நிற்கின்றது. இவ்வாறு தொடர்ச்சியாக தரம் ஒன்றுக்கு சேர்கின்ற தமிழ் மாணவர்களின் தொகையானது குறைந்து சென்றால் சுமார் பதினைந்து வருடங்களுக்கு அப்பால் எமது நிலமை என்னவாகும் என்பதனை நீங்கள் சிந்தித்து பாரக்கவேண்டும். குறிப்பாக .

இவ்வாறானதோர் நிலையானது தொடர்ந்தால் கடைசியாக ஒரு இனம் அழியும் தறுவாய்க்கே இட்டுச்செல்லும் என்பதில் ஐயமில்லை. நான் இதனை இனத்துவேசமாக  பேசவில்லை யதார்த்தமான விடயத்தைத்தான் முன்வைக்கின்றேன். அம்பாரை மாவட்டத்தினை பொறுத்தளவில் சனத்தொகை அடிப்படையில் முஸ்லிம்கள் முதலாமிடத்திலும்,சிங்களவர்கள் இரண்டாம் இடத்திலும் தமிழர்கள் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றார்கள். அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாமிடத்தில் தமிழர்களும் இரண்டாம் இடத்தில் முஸ்லிம்களும்  மூன்றாம் இடத்தில் சிங்களவர்களும் காணப்படுபகின்றனர்.

ஆனால் மேற்குறித்த நிலை தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் இரண்டாம் நிலைக்கு தள்ளுப்படவேண்டிய இக்கட்டான சூழ்நிலையை நாங்கள் எதிர் கொள்ள வேண்டி ஏற்படும். ஆகவே கடந்தகாலத்தில்  யுத்தங்கள், அனர்த்தங்கள், மோதல்கள் போன்ற பல்வேறுபட்;ட காரணங்களினால் எமது இனம் அழிந்துபோய்விட்டது மீதியாக எஞ்சியிருந்தவர்களும் பல தரப்பட்ட வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்கள். இவ்வாறு எமது இனமானது சிதைந்துபோயிருக்கின்றது.

இந்தகைய நிலையில் நாங்கள் சென்று கொண்டிருந்தால் இந்த நாட்டில் தமிழினம் என்ற ஒரு இனம் வாழ்ந்துள்ளதா என்ற கேள்வியை எதிர்காலத்தில் எழுப்பக்கூடிய சூழ்நிலைதான்; உருவாகும். அன்பார்ந்த பேற்றோர்களே நீங்கள் சிந்திக்கவேண்டியதும், கருத்திலெடுக்கவேண்டியதும் எதிர்கால சந்ததிக்கு எடுத்துரைக்க வேண்டியதுமான விடயமாக இந்த விடயமானது உள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.