ஓந்தாச்சிமடத்தில் சுனாமி பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் பதின்மூன்றாவது ஆண்டு நிகழ்வு

0
301
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் சுனாமி பேரலையினால் உயிர் நீத்த உறவுகளின் பதின்மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அக் கிராமக்களின் ஏற்பாட்டில் கிராமத்தலைவர் சற்குணம் தலைமையில் இன்று  நடைபெற்றது.

இந் நிகழ்வானது இக்கிராமத்தில் இருந்து உயிர் நீத்த 44 உறவுகளின் நினைவாக கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி முன்பாக நடைபெற்ற
இந்நிகழ்வில் மதகுருமார், பொதுமக்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர், சமுர்த்தி உத்தியோகத்தர் சங்கங்கள் அமைப்புக்களை சார்ந்த பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 உயிர் நீத்த உறவுகளின் உறவினர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலி உரையும் நிகழ்த்தப்பட்டது