இலங்கையின் வானொலி புகழ் பொப் இசை பாடகரான என்.இம்மானுவேல்காலமானார் . .

0
397

இலங்கையின்  வானொலி புகழ் பொப் இசை பாடகரான என்.இம்மானுவேல் அவர்கள் இன்று அதிகாலை 5.50 மணியளவில் காலமானார் . . .

இவர் சில நாட்களாக கடும் சுகயீனமுற்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் .இந்நிலையில் இன்றைய தினம் அவர் காலமானார்.

 அவரது உடலானது தற்போது திருகோணமலை உவர்மலை இல .31 4ம் குறுக்கு வீதியிலுள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டு  பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது..

இவரது இறுதி அஞ்சலி மற்றும் இறுதி ஆராதனை நிகழ்வுகள் எதிர்வரும் வியாழக்கிழமை ( 28-12-2017) பி.ப 3மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Gold Face கடற்கரை, ஆண்டவனும் அடிமைப் பட்டான், சித்திர கண்ணியர் ஊர்வலம் போகும் சிங்காரம் பார் , அவசரப்பட்டு திருமணம் செய்து அழுவதேனடா, மற்றும் மெல்லிசைப் பாடலான புடிச்சாலும் பிடிச்சேனே போன்ற இவரது பாடல்கள் இன்றும் இனிமை . .

. . திருக்கோணமலையின்

ஒரே காலத்தில் கால்பதித்த மெல்லிசை மன்னர்களாக திருமலை T. பத்மநாதன் அவர்களும் இம்மானுவேல் அவர்களும் இசையலுகில் வலம் வந்தவர்கள்.. திருமலை T .பத்மநாதன் அவர்கள் 18.11.2017 இல் இறையடி சேர்ந்தார். இன்று இம்மானுவேல் அவர்கள் காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.