மாணவர்கள் தொழில்நுட்பரீதியாகவும் மொழிரீதியாகவும் தங்களை மேம்படுத்த வேண்டும்.அரச அதிபர் மா.உதயகுமார்.

0
575

(சச்சி)

இன்றைய நவீன காலத்தில் பலதரப்பட்ட வாய்ப்புக்கள் காணப்படுவதால் மாணவர்கள் தொழில்நுட்பரீதியாகவும் மொழிரீpதியாகவும் மேம்படுத்த வேண்டும்
என மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான எம்.உதயகுமார்தெரிவித்தார்.
பெண்கள் வலுவூட்டல் செயத்திட்டத்தின் கீழ் பல்கலைகழக மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிற்பு கொடுப்பனவு நிகழ்வு (2017-12-26) இன்று காலை 10.30மணியளவில்மட்டக்களப்பு ப.நோ.ச.கட்டட மண்டபத்தில் இடம்பெற்றன.
இங்கு தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான எம்.உதயகுமார் குறிப்பிடுகையில்,
இளைஞர் அபிவிருத்தி அகத்தின் சிறப்பான இப்பணியை பாராட்டு வதுடன் வாழ்துக்களையும் தெரிவிக்கின்றேன். பெண்கள் வலு+ட்டல் செயத்திட்டத்தின் ஊடாக வறிய குடும்பங்களில் வாழ்கின்ற மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
கஸ்ரபிரதேசத்தில் இருந்து முன்னுரிமைப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கான இககல்வி ஊக்குவிப்புதிட்டத்தில், ஊக்குவிப்பை பெறும் மாணவர்கள் பயனுள்ளவகையில், தமது கல்வியில் உயரிய வளர்ச்சி காண வேண்டும்.
; இன்றைய நவீன காலத்தில் பலதரப்பட்ட வாய்ப்புக்கள் காணப்படுவதால் மாணவர்கள் தொழில்நுட்பரீதியாகவும் மொழிரீதியாகவும் மேம்பட வேண்டும்
இவ்வாறன சூழலில் தீங்கு விளைவிற்க கூடிய வெளி காரணிகளில் கவனம் செலுத்தாது அவற்றில் இருந்து பாதுகாப்பதுடன் பல்வகையான ஆற்றலையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்
அதன்மூலம் அறிவையும் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதையும் மாணவர்களுக்கு வலிறுத்தினார். இவ்வாறான சேவைகளை முன்னெடுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்புக்கு பராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அனுசரனையுடன் தொழிற்படும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பால் இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டன.
; மட்டக்கப்பு மாவட்டத்தின் ஆறு பிரதேசசெயலக பிரிவான வாகரை,வெல்லாவெளி,பட்டிப்பளை,கிரான்,வவுணதீவூ,வாழைச்சேனை ஆகிய பிரதேசசெயலகப்பிரிவில் நலிவுற்ற குடும்பங்களிலில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களை உற்சாகமூட்டும் திட்டத்தில் , மிகவும் பொருளாதாரத்தில் கஸ்ர நிலையில் வாழும் மாணவர்களை கிராமமட்ட பெண்கள் குழுக்கள் தெரிவு செய்திருந்தனர். பிரதேசசெயலாளர்களின் ஒத்துழைப்புடன் மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன் 61 கஸ்ரமான நிலையில் வாழும் குடும்பங்களில் உள்ள பல்கலைக்கழகம் கற்கும் பெண் மாணவர்கள் 59 பேருக்குஇங்கு காசோலை மாவட்ட அரச அதிபரின் முன்னிலையில் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் ஐP. தர்சினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்-உதயகுமார் பிரதம அதிதியாகவும் மற்றும் இளைஞர் அபிவிருத்தி அகத்தின் மாவட்ட இணைப்பாளர்-த.திலீப்குமார்,அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள் பல்கலைகழக மாணவர்கள் என பலரும் பங்கு கொண்டனர்
இந் நிகழ்வில் தலைமை உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் ஐP.தர்சினி உரையாற்றுகையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அருவி பெண்கள் வலையமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கழுக்காக பணியாற்றி வருகிறது.
வறிய நிலையில் உள்ள குடும்பங்களில் வாழும் மாணவர்களுக்காக அவர்களை உற்சாகமூட்ட இக் கல்விஊக்குவிப்பு வழங்கப்படுகிறது.
தொடர்ந்து விளக்க உரை நிகழ்த்திய இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் மட்டக்கப்பு மாவட்ட இணைப்பாளர் தங்கராசா-திலீப்குமார் உரையாற்றுகையில், கடந்த, யுத்தம் சுனாமி பேரலை போன்ற அனர்த்தங்களால் பெண்கள், சிறுவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
; அவர்களின் அபிவிருத்தி மேம்பாடு, பாதுகாப்பு போன்றவை கர்சனை கொள்ளவேண்டிய கடைப்பாடும் பொறுப்பும் அனைவருக்கும் உண்டு.
அந்த வகையில் பெண்கள் தங்களை தாங்கள் மேம்படுத்தவும் பெண்களின் ஆழுமை திறனை வளர்க்கவும் தன்னம்பிக்கையுடன் கிராமப்புற பெண்கள் தலைமைத்துவம்பெற்று தொழிபடுவதும் அவசியமாகின்றது.
இதற்கான சந்தர்ப்பங்களையும் வாய்ப்பையும் ஏற்படுத்தும் வகையில் மாவட்ட பெண்கள் வலையமைப்பு உருவாக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய இடங்களில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னேடுத்து வருகின்றன.
இவற்றான செயற்பாடுகளுக்கு ஒவ்வோரு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சிறப்பான பங்களிப்பு முக்கியமானதாகும்.
; அந்த வகையிலாக பெண்களை கல்வியல் துறையில் மேம்படுத்தும் வகையில் பல்கலைகழக மாணவர்கழுக்கான கல்வி ஊக்குவிப்பு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்றும் இக் கொடுப்பனவு எம்மால் வழங்கப்படுகின்றன என தெரிவித்தார்.