யாழ், மட்டக்களப்பில் நடைபெற்ற மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது நினைவு நிகழ்வுகள்.

0
520

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12ஆவது நினைவு நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில்  நடைபெற்றது. இதன்போது,  ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமரரின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், பொதுமக்கள், எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை,

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 25.12.2017 திங்கட்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பிற்பகல் 05.30 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்தார்.