உள்ளுராட்சி மன்றங்களுக்கான பிரச்சார நடவடிக்கைகள் சூடு பிடிக்கின்றன.

0
208

உள்ளுராட்சி மன்றங்களுக்கான பிரச்சார நடவடிக்கைகளை கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் முடுக்கி விட்டுள்ளன.

கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஏற்கெனவே, ஞாயிற்றுக்கிழமையிலிருந்து 24.12.2017 தமது பிரச்சாரங்களை ஆரம்பித்து விட்டிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பான வேட்பாளர்களாக போட்டியிடும் அன்னம்மா சௌந்தரராஜன் ரி. இராஜரெத்தினம் கே. சிவலிங்கம் பொன். செல்வநாயகம் மற்றும் எஸ். இராஜரெத்தினம் ஆகியோர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம். இராஜேஸ்வரனின் மக்கள் சந்திப்பு பணிமனையிலிருந்து தமது பிரசாரத்தினை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தனர்.

மற்றும் இருவேட்பாளர்களான ஹென்றிமகேந்திரன், சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கல்முனை அம்பலதத்டிப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்று குருக்களின் சிரம் பணிந்து, வழிபாடு செய்து தமது பிரச்சாரத்தினை ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியும் ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள ஏறாவூர் நகர வீடொன்றின் மதில்மேல் பலாத்காரமாக அரசியல் பிரச்சார சுவரொட்டி ஒட்டப்பட்டதான முறைப்பாடு தமக்குக் கிடைத்திருப்பதாக பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.