பட்டிருப்புத் தொகுதியின் ஆட்சியினைக் கைப்பற்றுவோம் – கணேசமூர்த்தி

0
375

நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியிலுள்ள மண்முனைதென் எருவில் பற்று, பட்டிப்பளை, போரதீவுப்பற்று, ஆகிய மூன்று சபைகளையும் ஐக்கிய தேசியக் கட்சியைக் கைப்பற்றும், இதற்கான முழுமையான ஆதரவினை மக்கள் வழங்குவார்கள் எம் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு மக்களுக்கு சேவையாற்று வதற்கு ஆர்பணித்துள்ளேன்.

என ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில்; ஞாயிற்றுக்கிழமை (24) மாலை களுதாவளையில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் பலமான கட்சித் தொண்டர்களை தேர்தலில் களமிறக்கியிருக்கின்றோம். கடந்தகால தேர்தலைவிடவும் இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும். என்றும் இல்லாத வகையில் மாவட்ட மட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள் நிறைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது. ஐக்கியதேசியக் கட்சி ஒவ்வொரு கிராமங்களிலும் கிளைக் காரியாலயங்களை நிறுவியது மாத்திரமல்லாது பல அபிவிருத்திச் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது. அதன் நிமிர்த்தமாகவே இன்று பெருந் திரளானசனக் கூட்டம் எம்பின்னால் காணப்படுகிறார்கள்.

மக்கள் எமது கடசியின் வெற்றிக்கு உரம் ஊட்டுவதாக அமைந்துள்ளது. பிரதேச சபைகளின் ஆட்சி அதிகாரங்களை ஐக்கியக் தேசியக் கட்சி பெற்றுமானால் கடந்த காலங்களைவிடவும் எமது பிரதேசங்கள் பாரிய அபிவிருத்தி இலக்கினை அடையும் எனவும் அவர் தெரிவித்தார்.