இரா. சம்பந்தன் உடல் நலம் தேறி வருகின்றார்

0
497

உடல் நலமின்மை காரணமாக கொழும்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் உடல் நலம் தேறி வருகின்றார். திருகோணமலையில் தொண்டர்களுடன் இடம்பெற்ற தொடர் சந்திப்புகளையடுத்து சளித்தொல்லையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்க்கட்சித்தலைவர், தற்போது உடல் நலன் தேறி வருவதாக தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர் பங்கேற்கவிருந்த, தமிழகத்தில் நடைபெறவுள்ள நத்தார் விசேட நிகழ்வில் அவரின் சார்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கலந்து கொள்கின்றார்.