முள்ளியவளை இலங்கை வங்கி கிளை ஊழியர்களின் முயற்சி தொலைந்த நகை மீண்டும் கிடைத்தது.

0
331
முள்ளியவளை இலங்கை வங்கி கிளையில் அடவுவைத்த நகையினை மீட்ட நபர் ஒருவர் நகையினை தொலைத்து நிற்க இலங்கை வங்கி நிர்வாகத்தினளால் நகை கண்டுபிடிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று 21.12.2017 அன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் இலங்கைவங்கியில் இரண்டரை பவுண் நகையினை அடைவு வைத்து சென்றவர் இதனை மீட்பதற்காக வந்து மீட்டு விட்டு வெளியில் செல்லும் போது வங்கியின் வாசல்பகுதியில் நகை தவறி வீழ்ந்துள்ளது இதனை அறியாதவர் முல்லைத்தீவு நோக்கி சென்றுள்ளார் இடையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உந்துருளிக்கு எரிபொருள் நிரப்புவதற்காக சென்றபோது தனது உடையில் வைத்திருந்த நகையினை காணாத நிலையில் அச்சமடைந்து மீண்டும் இலங்கை வங்கி வந்து ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து வங்கியில் ஊழியர்கள் தேடிப்பார்த்தார்கள் இன்னிலையில் தொலைத்த நகையினை வங்கியின் வாசலில் கிடந்து ஒரு பெண் எடுப்பதை கண்ட இளைஞன் இது தொடர்பில் முகாமையாளரிடம் தெரியப்படுத்திவிட்டு சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து முகாமையாளர் வங்கியில் உள்ள சி.சி.ரிவி கமாரவில் பாதிவான காட்சிகளை பார்வையிட்டு குறித்த பெண்ணினை இனம் கண்டுள்ளார்கள்.
தொடர்ந்து குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற வங்கி நிர்வாகம் பெண்ணிடம் கேட்டபோது உரிமையாளர் வந்து கேட்பார் அப்போது கொடுக்கஇருப்பதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக பெண்ணிடம் இருந்த நகையினை மீட்டு நகையின் உரிமையாளரிடம் வங்கி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது. முள்ளியவளை பகுதியில் உள்ள இலங்கை வங்கி கிளையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமாரா மூலம் அண்மையில் நகை கடைஒன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது கமார பதிவின்மூலமே அதனை பார்வையிட்டு திருடனை பொலீஸார் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.