காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் அனர்த்த முன்னெற்பாடு சம்பந்தமான கலந்துரையாடல்

0
488
ஏதிர்வரும் காலத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் அனர்த்த முன்னெற்பாடு சம்பந்தமான கலந்துரையாடல் மன்முனை தென் எருவில் பற்று  பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
    உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.சீ.எம்.றியால் முகமட், ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், பிரதேச சபை சாபை, கடலோர பாதுகாப்பு, போன்ற திணைக்களங்களை சார்ந்த உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூகசேவை உத்தியோகத்தர்கள், இலங்கை மின்சார சபை, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், விஷேட அதிரடி படையினர், பொலிசார், கடற்படையினர்,  என பலதரப்பட்ட திணைக்களங்களைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
   ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில் எதிர்வரும் காலங்களில் வடகீழ் பருவப்பேச்சி மழையினால் ஏற்படும் சேதங்களை தவிர்த்துக் கொள்ளும் முகமாக அனர்த்த முன்னேற்பாடுகளை மேற் கொள்ளுவது சம்பந்தமாக பல்வேறு திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. இதன்போது அனைத்து திணைக்களங்களுக்கும் அனர்த்தம் ஒன்று ஏற்பாட்டால் செயற்படவேண்டிய விதம் சம்பந்தமாகவும் திணைக்களம் சார்பில் மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் சம்பந்தமாகவும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அவர்கள் அவ்வாறு செயற்படுவதற்கு தடையாய் இருக்கும் காரணிகள் சம்பந்தமாகவும் கலந்து கொண்ட திணைக்களம் சார் உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்து கொள்ளப்பட்டது.