மூதூர் சூடைக்குடா திருக்குமரன் ஆலயச்சூழலில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப்பணிகளை நிறுத்துமாறு மூதூர் நீதிமன்றம் உத்தரவு.

0
660

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப்பிரதேசத்தில் உள்ள சூடைக்குடா திருக்குமரன் ஆலயச்சூழலில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப்பணிகளை நிறுத்துமாறு மூதூர் நீதிமன்றம் கடந்த 19.12.2017 இல் அறிவுறுத்தல்விடுத்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பான நீதிமன்ற அறிவுறுத்தலை குறித்த ஆலய நிர்வாகத்திற்கு சம்பூர் பொலிசார் வழங்கியுள்ளனர்..
குறித்த ஆலயசூழலில் ஆலயத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப்பணி பற்றி சம்பூர் பொலிசாருக்கு பௌத்த துறவிகள் சிலரால் கிடைத்த முறைப்பாட்டையடுத்து சம்பூர் பொலிசார் நீதிமன்றத்தில் இத்தடையுத்தரவைக்கோரியதற்கிணங்க இத்தடையுத்தரவு மூதூர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது..
இதற்கிடையில் பிரதேச செயலக அதிகாரிகள்,பொலிசார் உள்ளிட்ட பலரும் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.நேற்று (20)க்காலை குறித்த இடத்திற்கு வெளியிடங்களில் இருந்து வந்த பிக்குகள் சிலருடன் அங்குள் மக்களிற்குமிடையில் முறுகல்நிலமையும் பதற்ற நிலமையும் ஏற்பட்டன. ஆலயசூழலில் பாதணிகளுடன் இவர்கள் சென்றதனால் இந்நிலமைஏற்பட்டது.இதனை பொலிசார் பின்னர் கட்டுப்படுத்தினர்.
நேற்று மாலை6.00மணியளவில் இதனைக்கேள்வியுற்ற பாரளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் அங்கு சென்றதுடன் அவர் தலமையில் பொதுமக்களுடனான கூட்டமொன்றும் நடைபெற்றன.இங்கு மக்கள் தமது கவலைகளை வெளியிட்டனர்.
இதுபற்றி ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கையில்,
இவ்வாலயம் நீண்டகாலமாக எமது மக்களால் வழிபட்டு வந்த ஆலயமாகும்.ஆனாலும் 2006 எப்பிரலில் ஏற்பட்ட யுத்த இடம்பெயர்வினால் மூதூர் கிழக்கைச்சார்ந்த அனைத்து தமிழ் கிராம மக்களும் இடம்பெயர்ந்தனர்.
முற்றிலும் தமிழ்மக்கள் வாழும் மூதூர்கிழக்குப்பிரதேசத்தின் கடோலரத்தில் சம்பூருக்கு அடுத்தாற்போல் சூடைக்குடா கிராமம் உள்ளது.
இக்கிராமத்தின் மீழ்குடியேற்றம்பல பகிரதப்பிரயத்தனத்தின் பின்னர் இடம்பெற்றது. இந்நிலையில் சிதைவடைந்திருந்த இவ்வாலயம் மீழவும் சிறிதுசிறிதாக புனரமைக்கப்பட்டு வந்தவண்ண முள்ளன.கடந்த பல மாதங்களுக்குமுன்னர் கும்பாபிஷேகமும் இடம்பெற்றன.
அண்மையில் இவ்வாலயதேவைக்கும் பொதுமக்களின் குடிநிர்தேவைக்குமாக பிரதேச சபைக்கூடாக குடிநிர் கிணறும் அமைக்கப்பட நடவடிக்கைஎடுக்கப்பட்டன.இவ்வாறு ஆலயசூழலம் தேவைகருதி அபிவிருத்தி செய்யப்பட்டு வருகையில் கடந்த வாரத்தில் சில பௌத்ததுறவிகள் வந்து பார்வையிட்டுச்சென்றதுடன் குறித்த எமது ஆலயம் அமைந்துள்ள மலைக்குன்றில் தமது பௌத்த ஆலயம் பல தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததாகவும் அதனை நாம் அழித்துள்ளதாகவும் தெரிவித்ததுடன் பொலிசார்மூலம் தடைபோட்டுள்ளனர். நீண்டகாலமாக சுமார் 10 வருடங்களாக அகதிகளாக அலைந்த நாம் தற்சமயம் எமது பூர்வீக நிலத்தில் குடியேறி நின்மதியாக எமது மத வழிபாடுகளையும் செய்ய முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.எனவும் முறையிட்டனர். இங்கு கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்ததுடன். யார்வந்துசென்றாலும் பொறுமையுடன்நடந்துகொள்வதுடன் சற்று அமைதிகாக்குமாறும்கேட்டுக்கொண்டனர். ஆயினும் புதிதாக இப்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலமைகாரணமாக மக்கள்மத்தியில் பெரும் பதற்றநிலமை ஏற்பட்டுள்ளது.