ஐக்கிய தேசியக்கட்சி மட்டு மாவட்டத்தின் அனைத்து சபைகளையும் கைப்பற்றும் – எஸ்.மாசிலாமணி

0
320

தங்களுடைய அபிவிருத்திகளைத் தாங்களே செய்கிற ஒரு நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறோம். இது இதுவரை காலமும் இதனைப்பற்றி மக்கள் சிந்திக்கவில்லை. பெண்களுடைய பிரதிநித்துவமும் இருக்கின்ற வேளை காத்திரமானமதாக இருக்கும் என முன்னாள் மாகாண சபை உறுப்பனர் எஸ்.மாசிலாமணி தெரிவித்தார்.

நேற்றைய தினம் வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளுராட்சிச் சபைகளுக்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த பின்னர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முன்னாள் மாகாண சபை உறுப்பனர் எஸ்.மாசிலாமணி,

ஒவ்வொரு பிரதேசத்தின் அபிவிருத்தியையும் கிராம மக்களிடம் கையளிக்கின்ற முதலாவது கட்டம் தற்போது நிறைவடைந்திருக்கிறது. இப்பொழுது மண்முனை மேற்கு பிரதேச சபைக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறோம். ஒவ்வொரு சபைக்கும் கிராமத்தினதும் அடிமட்டத்திலிருந்து வேட்பாளர்கள் வந்திருக்கிறார்கள்.

தங்களுடைய பிரசேதங்களில் தனிப்பட்டளவில் அபிவிருத்திகளைச் செய்தவர்களை நாங்கள் உள் அழைத்து இன்று தேர்தலில் நிறுத்தியிருக்கிறோம். அந்தந்தப்பிரதேசங்களின் அபிவிருத்திகள் எது முக்கியமானது என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆகவே எல்லாருமாக இருந்து தங்களுக்குள்ளேயே தீர்மானத்தை எடுத்து எது முன்நிலைப்படுத்தப்பட வேண்டும் என்கிற தங்களுடைய அபிவிருத்திகளைத் தாங்களே செய்கிற ஒரு நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறோம். இது இதுவரை காலமும் இதனைப்பற்றி மக்கள் சிந்திக்கவில்லை. பெண்களுடைய பிரதிநித்துவமும் இருக்கின்ற வேளை காத்திரமானமதாக இருக்கும். பெரும்பான்மையான பிரதேசங்களுக்கு ஆதரவுகள் இருக்கின்றன. அந்தவகையில் பெரும்பாலான சபைகளைக் கைப்பற்றுவோம் என்று தெரிவித்தார்.