ஒரு தொகுதி மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு

0
275
முல்லைத்தீவு மாவட்டத்தில் இளையோர் திறன் விருத்தி செயற்திட்டம் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரண்டீனா நிறுவனத்தின் அனுசரணையுடன் மல்லாவி கணணி தொழில் நுட்ப நிறுவனத்தினரால் ஒரு தொகுதி மாணவர்களுக்கான ஆழுமையினை விருத்திசெய்யும் கணணி அறிவு ஆங்கில அறிவு மற்றும் தலைமைத்துவம்  உள்ளிட்ட இளையோர் திறன் விருத்தியினை மேம்படுத்தும் நோக்கில் 52 பேருக்கு கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சி வகுப்புக்களின் நிறைவில் விருது வழங்கும் நிகழ்வு 19.12.2017 அன்று காலை மல்லாவி சிவன் கோவில் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் துணுக்காய் உதவி பிரதேச செயலார் இ.பிரதாபன் மதகுருமார்கள் மற்றும் பரண்டீனா நிறுவன பொது முகாமையாளர் ஸ்கேமந்த மாவட்ட முகாமையாளர் மல்லாவி கணணி தொழில் நுட்ப நிறுவன அமைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள் இதில் பயிற்றப்பட்ட பல மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க ஏற்பாடாகியுள்ளது என்று ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்த்தில் பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்புக்கள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் இவர்களுக்கான தொழில் கற்கைநெறிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் செயற்பாட்டில் பரண்டீனா நிறுவனம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.