மட்டு. மாநகர சபை, கோரளைப்பற்று மேற்கு, காத்தான்குடி நகர சபைக்கு மக்கள் விடுதலை முன்னணி வேட்பு மனு.

0
259

மட்டக்களப்பு மாநகர சபை, கோரளப்பற்று மேற்கு பிரதேச சபை, காத்தான்குடி நகர சபை ஆகிவற்றுக்கு வேட்பு மனுக்கள் இன்றைய தினம் புதன்கிழமை முற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் முஜிப் இப்ராகிம் தலைமையில் இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இங்கு கருத்து தெரிவித்த முஜிப் இப்ராகிம்,

இந்த நாட்டில் ஊழல் மோசடி, லஞ்சத்துக்கெதிராகப் Nபுராடிவருகின்ற மக்கள் விடுதலை முன்னணியைப் பலப்படுத்த வேண்டியது இந்த நாட்டிலே வாழுகின்ற ஒவ்வொரு பிரஜைக்கும் இருக்கிறது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக இணைந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம்.

இந்த முறை நாட்டில் நடைபெறுகின்ற தேர்தல் மக்கள் விடுதலை முன்னணிக்கு மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த காலங்களில் மிகவும் கடுமையாக, நேர்மையொடும் கொள்கையோடும் பற்றுறுதியோடும் உழைத்து வருகிற மக்கள் விடுதலை முன்னணி இந்தத் தேர்தலில் கணிசமான ஆசனங்களைப் பெற்று இந்த நாட்டின் பாரிய சக்தியாக மீண்டெழுந்து வரும் என்ற நம்பிக்கையிருக்கிது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பாக எங்களுடைய தோழர்களோடு இந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். இந்தத் தேர்தல் இந்தத் தேசத்தில் நேர்மையை நியாயத்தை ஊழலை எதிர்த்துப் போராடுகின்ற, அதற்காக உழைக்கின்ற பொது மக்களுக்கு நல்லதொரு பாடத்தினையும், செய்தியையும் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையுமிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே மண்முனைப்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேச சபை , ஏறாவூர் நகர சபை ஆகியவற்றுக்கும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. அந்த வகையில் மொத்தமாக 6 சபைகளில் மக்கள் விடுதலை முன்னணி போட்டியிடுகிறது.