ஆட்சி மாற்றம் வேண்டும் என்றவர்கள் இப்போது வேண்டாம் என்கிறார்கள். – சிறிலங்கா பொதுஜன பெரமுன

0
263

இன்று நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளும், மக்களுக்கு கஸ்ரங்களும் காரணமாக ஆட்சி மாற்றம் ஒன்று வேண்டும் என்பதனை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் அமைப்பாளரான ஏ.எல்.எம்.உவைஸ் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபை உறுப்பினரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் அமைப்பாளரான ஏ.எல்.எம்.உவைஸ் தலைமையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்டததின் கோரளைப்பற்று மேற்கு, காத்தான்குடி நகர சபை ஆகியவற்றுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தது.

இந்த வேட்புமனுத்தாக்கலையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இக்கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் அமைப்பாளரான ஏ.எல்.எம்.உவைஸ் ..

இன்று நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளும், மக்களுக்கு கஸ்ரங்களும் காரணமாக ஆட்சி மாற்றம் ஒன்று வேண்டும் என்பதனை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புக்கு நான் வருகிற வேளை மூன்று வாரங்களுக்கு முன்னர் வரும் போது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் மிகவுமு; வித்தியாசமாக இருக்கிறது. காரணம் மக்கள் ஆட்சி மாற்றறம் வரவேண்டும் என்பதும், மீண்டும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்பதற்கும் உன்னிப்பாக இருக்கிறார்கள். அதில் விசேடமாக, சிறுபான்மையான தமிழ், முஸ்லிம் மக்கள், அன்றைக்கு அந்த ஆட்சியை வேண்டாம் என்று சொன்னவர்கள், இன்று வேண்டும் என்று சொல்கிறார்கள். எங்களுக்கு வேட்பாளர்கள் கூட எடுக்க முடியாது என்று சொன்னார்கள். இன்று மட்டக்களப்பில் வேட்பு மனுக்கேட்டு நிறையப்பேர் வருகிறார்கள். இது ஒரு வரப்போகிற மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கும் வெற்றிக்குமு; பெரியதொரு ஊன்றுகோல் என்றார்.