பட்டதாரியான விவசாயியின் சடலம் மடுவொன்றிலிருந்து மீட்பு

0
515

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவு புலுட்டுமானோடை எனும் கிராம பிரதேசத்திலுள்ள நீர் நிரம்பிய மடுவொன்றிலிருந்து பட்டதாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஏறாவூர் பொலிஸ் பிரிவு வந்தாறுமூலை, சந்தை வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் தர்ஷன் (வயது 32) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 16ஆம் திகதி வந்தாறுமூலையிலுள்ள தனது வீட்டிலிருந்து பறப்பட்டு தனது பண்ணைக்குச் சென்றிருந்ததாகவும் அதன் பின்னர் திங்கட்கிழமை பண்ணைப் பகுதியிலுள்ள நீர் நிரம்பிய மடு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டதாரியான இவருக்கு அரச உத்தியொகம் கிடைக்காததால் நண்பர்களாகச் சேர்ந்து கரடியனாறு ஈரலக்குளம் பகுதியிலுள்ள காணிகளில் விவசாயம் செய்து வருவதாகவும் உறவினர்கள் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும், 1995ஆம் ஆண்டு வந்தாறுமூலைப் பகுதியில் படையினருக்கும் எல்ரீரீஈ இனருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இவரது தாய், தந்தை, தங்கை ஆகியோர் கொல்லப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் உடற் கூறு பரிசோதனைக்காக மட்டக்கயளப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம்பற்றி விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.