மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் பாரம்பரிய போசாக்கு உணவு கண்காட்சி.

0
800

பாரம்பரிய உணவுகளை தயாரித்தலும்;, கண்காட்சியும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பல்துறை போசாக்கு நிகழ்ச்சி திட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் நாட்டில் போசாக்கு குறைவான 5 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு போசாக்கு உணவுகளை வழங்கி அதனூடாக அவர்களது ஆரோக்கியத்தை கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும். இதன் ஒரு திட்டமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் இன்று (19) வேள்ட்விசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் பட்டிப்பளை பிரதேசத்தின் பாரம்பரிய போசாக்கு நிறைவான உணவுகளை செய்யப்பட்டு அனைவரது பார்வைகளுக்குமிடப்பட்டன.

கிராமங்களில் காணப்படும் அன்னையர் குழாத்தினரின் திறமையினால் செய்யப்பட்ட 75ற்கு மேற்பட்ட போசாக்கு உணவு கண்காட்சி பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஸ் அவர்களின் தலமையில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களங்களின், அதிகாரசபைகளின் உத்தியோகத்தர்கள், வேள்ட்விசன் நிறுவன திட்ட இணைப்பாளர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.