இந்து ஸ்வயம் சேவக சங்கம் ஏற்பாடு செய்திருந்த பண்புப் பயிற்சி முகாம்

0
367

இந்து ஸ்வயம் சேவக சங்கம் ஏற்பாடு செய்திருந்த பண்புப் பயிற்சி முகாம் காமாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கருணாலயம் மண்டபத்தில் நேற்று 17 திகதி  ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இப்பயிற்சி முகாமானது சங்கத்தின் தலைவர் ஏ.ரவீந்திரன் தலைமையில் விசேட கணபதி வேள்வியுடன் ஆரம்பிக்கப்பட்டு 15 நாட்கள் கொண்ட பயிற்சியாக நடைபெறுகின்றது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அதிபர் எம். உதயகுமார்   விஷ்வ ஹிந்து பறிஷத் அமைப்பின் சர்வதேச செயலாளர் சுவாமி விக்ஞானாந்தா ஆகியோர் விசேட அதிதியாக கலந்து கொண்டதுடன் இப்பயிற்சி முகாமில் தியானம், யோகாசனம், மனவலிமை, போன்ற இன்னேரன்ன விடயங்கள் பயிற்றுவிக்கப்படுவதுடன்   சிறப்புரையினை சுவாமி விக்ஞானாந்தா அவர்களினார் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இப்பயிற்சி முகாமானது பல நாடுகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு முதற் முறையாக இலங்கை மட்டக்களப்பில் நடைபெறுகிற்றது என்பது சிறப்பிற்குறியதாகும்.