உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் 20 இல் ஆரம்பம்

0
302
உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த இழப்பீடு இம்முறை வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட வகையில் ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.
நெல் சோளம் பெரிய வேங்காயம் கிழங்கு மற்றும் மிளகாய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இந்த உற்பத்தி காப்புறுதி இழப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அரசாங்கம் இந்த திட்டத்திற்காக வரவு செலவு திட்டம் மூலம் 300 கோடி ரூபாவை ஓதுக்கீடு செய்துள்ளது.
வறட்சி வெள்ளம் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் உற்பத்தி காணிக்காக இதுவரையில் 10 ஆயிரம் ரூபா காப்புறுதி இழப்பீடாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.