பணம் படைத்தவர்களுக்கும் மற்றும் மண் கொள்ளையர்களுக்கும் சந்தர்ப்பம்

0
368

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படப்போவதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை தெரிவித்தார். அவ்வாறு வெளியேறும் நான், உள்ளூராட்சிமன்ற தேர்தலில் சுயேட்சையாகவோ அல்லது வேறு தமிழ் கட்சிகளுடனோ இணைந்து செயற்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சிக்காக கடந்த 1965ஆம் ஆண்டில் இருந்து ஒரு தொண்டனாக சேவையாற்றிவந்ததாகவும் தன்னை இன்று அந்தக் கட்சி புறந்தள்ளிவருவதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்காக உழைத்தவர்கள் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் புறந்தள்ளப்பட்டு பணம் படைத்தவர்களுக்கும் மற்றும் மண் கொள்ளையர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், பாமர மக்களை கருவேற்பிலைபோல் பயன்படுத்திவிட்டு பணம் படைத்தவர்களையும் கல்விமான்களையும் வளப்படுத்துவது பொருத்தமற்றது என்பதுடன் வாக்களித்த மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.